பாடகர் SPB நினைவாக மறைந்த நடிகர் விவேக் செய்திருந்த செயல்! தற்போது நடந்தேறிய ஆச்சரியம்... நடிகர் செல்முருகன் வெளியிட்ட புகைப்படம்
பாடகர் எஸ்.பி.பி நினைவாக, கோவையில், நடிகர் விவேக் துவக்கி வைத்த எஸ்.பி.பி வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், ஆச்சரியமளிக்கும் வகையில் நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து துளிர்த்துள்ள நிலையில் அதை நெகிழ்ச்சியுடன் செல்முருகன் பகிர்ந்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, 'சிறுதுளி' அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, கோவை பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கின.
அவரது வயதை குறிப்பிடும் வகையில், 74 மரக்கன்றுகள், இசை குறியீடு வகையில் நடப்பட்டன. மிக முக்கியமாக, இசை கருவிகள் தயாரிக்க பயன்படுத்தும் மரங்களின் வகைகள் மற்றும் ஸ்தல விருட்ச மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டன.
— cellmurugan@gmail.co (@cellmurugan) May 1, 2021
சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக், இவ்விழாவில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று, மரக் கன்றுகள் நட்டதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, மக்கள் மத்தியில் வலியுறுத்தினார்.
அவர் துவக்கி வைத்த, எஸ்.பி.பி., வனம் பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள், நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்து, ஆரோக்கியமாக இலைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. வழக்கமாக, செண்பகப்பூ, செப்டம்பர் மாதங்களில் பூக்கும்.
ஆனால், மரக்கன்று நட்ட, நான்கே மாதத்தில், விவேக் மறைந்த மூன்றாவது நாளில், செண்பகப்பூ மலர்ந்தது.
இது, அப்பகுதி மக்களிடமும், 'சிறுதுளி' அமைப்பினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து சிறுதுளி நிர்வாகி கூறுகையில், இந்த வனத்தை உருவாக்கிய நிகழ்வில் பங்கேற்க, நடிகர் விவேக் விருப்பப்பட்டார்.
செண்பகம் மற்றும் புன்னை மரங்களை நட்டு, விழாவை துவக்கி வைத்தார்.
நான்கே மாதங்களில், ஆரோக்கியமாக நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதோடு, பூ பூத்தது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என கூறியுள்ளார்.
இது தொடர்பான செய்தியை புகைப்படத்துடன் நடிகர் செல்முருகன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
விவேக்கின் இறுதி நிமிடம் வரை அவரின் நிழலாக இருந்தவர் நடிகர் செல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.