6 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் போதே விவேக்கை பாதி மரணம் ஆட்கொண்டுவிட்டது! வெளியான உருகவைக்கும் தகவல்
6 ஆண்டுகளுக்கு முன் விவேக் மகன் மரணத்தின் போதே பாதி மரணம் அவரை ஆட்கொண்டுவிட்டது என அவரின் நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் விவேக் மறைந்து ஒருநாள் கடந்துவிட்டது. இருந்த போதிலும் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் அந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
அவரது சமூக அக்கறையால் 'சின்னக்கலைவாணர்' என்ற பெயர் கிடைத்தது அவருக்கு. சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத அப்பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது.
ஆனால் வாழ்க்கையிலும் 'சின்னக்கலைவாணர்' என்பது தொடரவேண்டுமா என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது. பொதுவாழ்வில் தமிழக மக்களுக்கு மேடை நாடகம், சினிமா மூலம் சிறந்த சீர்த்திருத்த கருத்துகளை சொன்ன கலைவாணர் மறைந்தபோது அவரது வயது 48 மட்டுமே, அவரது இளவல் சின்னக்கலைவாணர் விவேக் 59 வயதில் மரணத்தை தழுவியுள்ளார்.
6 ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் பிரச்சன்னா மரணத்தின் போதே பாதி மரணம் அவரை ஆட்கொண்டுவிட்டது, இப்போது வந்துள்ளது மீதி என்கின்றனர்.
அவருக்கு நெருக்கமானவர்கள். மகனின் மரணத்தின் சோகம் அவரை மிகவும் உடைத்துவிட்டது. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் புத்திர சோகம் அவரை மிகவும் வாட்டியது.
மிகுந்த இசையார்வம் கொண்டிருந்த அவரது மகன் 18 வயதில் சிறந்த இசையமைப்பாளராக வருவான் என எதிர்ப்பார்த்த மகன் 13 வயதில் டெங்குக் காய்ச்சலால் 40 நாட்கள் மருத்துவமனை போராட்டத்திற்கு பின் உயிரிழந்தார்.
டெங்குக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த விவேக், தனது மகன் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தது அவரை மிகவும் உடைத்துப் போட்டது என்பது தான் பெரும் சோகம்!