ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகிய VIVO: இனி ஸ்பான்சர் செய்யப்போவது யார் தெரியுமா?
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விவோ விலகியுள்ள நிலையில் இனி டாடா ஐபிஎல் ஸ்பான்சராக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐபிஎல் என்ற வார்த்தையை நாம் தனியாக கேட்பதை விட டிஎல்எப் மற்றும் விவோ ஐபிஎல் என்றே கேட்டு பழகியிருப்போம்.
அதிலும் சில ஆண்டுகளாக சீன நிறுவனமான விவோ தான் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப் செய்து வந்தது.
இந்த நிலையில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் மாற்றம் செய்ய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம்.
இந்த தகவலை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் வெளியிட்டுள்ளார்.