3D கர்வ் டிஸ்ப்ளேவுடன் வெளியாகும் விவோவின் அசத்தலான போன் Vivo X100 Pro
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஸ்மார்ட் போன் சந்தையில் நுழைந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு புதிய போன்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ மற்றொரு புதிய போனை கொண்டு வருகிறது.
இந்த போன் Vivo X100 Pro என்ற பெயரில் சீனாவில் வெளியிடப்படும். இந்த போனில் என்ன அம்சங்கள் இருக்கும்? விலை எவ்வளவு? இது போன்ற முழு விவரங்கள் உங்களுக்காக..
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Vivo X100 Pro என்ற புதிய போனை அறிமுகப்படுத்துகிறது. இந்த போன் நவம்பர் 13ஆம் திகதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கொண்டு வரப்படும். இது 12 GB ரேம், 256 GB ஸ்டோரேஜ், 16 GB ரேம், 512 GB ஸ்டோரேஜ் அல்லது 1TB சேமிப்பு வகைகளில் வெளியிடப்படும்.
Vivo X100 Pro ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த திரை 2,800 x 1,260 பிக்சல்கள் கொண்டது. இந்த போனில் 4nm MediaTek Dimension 9300 SoC செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வேலை செய்யும்.
கேமராவைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட பின்புற கேமராவை வழங்கும். இதில் முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் 50 மெகாபிக்சல்கள். இந்த கேமராவில் 100x டிஜிட்டல் ஜூம் உள்ளது. செல்ஃபியை பொறுத்த வரையில் 32 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா உள்ளது.
மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் எலக்ட்ரிக் பைக்; Ultraviolet அறிமுகப்படுத்தும் கேம் சேஞ்சர்!
பேட்டரியைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி உள்ளது, இது 120 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது புளூடூத் 5.4 மற்றும் வைஃபை போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு, நவிசி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Vivo X100 அடிப்படை மாடலின் விலை CNY 3,999 (தோராயமாக ரூ. 45,600) இருக்கும். ஆனால், இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |