பிரமிக்க வைக்கும் கேமராக்களுடன் Vivo V40 Pro: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
விவோ நிறுவனத்தின் V40 Pro மாடல் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சக்திவாய்ந்த போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், வெளியான தகவல்கள் மற்றும் டீசர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அற்புதமான கேமரா அமைப்பு
V40 Pro மூன்று கேமராக்களுடன் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கிய கேமரா 50MP telephoto Sony IMX816 sensor சென்சார் கொண்டதாக இருக்கும். இதனுடன் 50MP ultra-wide கேமரா மற்றும் 50x ZEISS Hyper Zoom கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Vivo V40, V40 Pro teasers begin in India
— Anvin (@ZionsAnvin) July 24, 2024
Vivo V40 series key specifications
- India’s thinnest 5,500mAh battery phone
- 80W charging
- IP68 rating
Vivo V40
- Lotus Purple
- Ganges Blue
- Titanium Grey
Vivo V40 Pro
- Ganges Blue
- Titanium Grey
- Camera specs: 50MP selfie,… pic.twitter.com/ct6yclN4an
மேலும், குறைந்த ஒளியில் சிறப்பான புகைப்படங்களை எடுக்க உதவும் OIS (Optical Image Stabilization) தொழில்நுட்பமும் இதில் இருக்கும்.
அழகான திரை
உயர் ரெப்ரெஷ் ரேட் கொண்ட பிரகாசமான AMOLED திரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் அற்புதமான காட்சி அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த செயல்திறன்
இந்த போனில் முன்னணி செயலியானது பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vivo V40 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 6300 processor கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் எந்தவித தடையின்றி பல செயல்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
பற்றரி திறன்
Vivo V40 Pro அதிக திறன் கொண்ட பற்றரியுடன் விரைவான சார்ஜிங் தொழில்நுட்பமும் இணைந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான தகவல்கள் படி, 5,500mAh பற்ற்ரி திறன் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் தூசி மற்றும் நீர் இருந்து பாதுகாப்பான சுழலை உறுதி செய்வத்ற்காக IP68 தர மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் Ganges Blue மற்றும் Titanium Grey ஆகிய நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |