AI அம்சங்களுடன் அறிமுகமான Vivo T4 பட்ஜெட் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
சீனாவைச் சேர்ந்த முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக விவோ டி4 (Vivo T4) என்ற மிட்-செக்மென்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்துள்ள இந்த போன், இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A legacy of levelling up. A future of phenomenal features. The vivo T Series has always been the trailblazer. You ready to Get Set Turbo with the new vivo T4?
— vivo India (@Vivo_India) April 21, 2025
Know more https://t.co/O732aX9Fec#vivoT4 #ComingSoon #TurboLife #GetSetTurbo pic.twitter.com/etfTIzbokm
Vivo T4 முக்கிய சிறப்பம்சங்கள்
Display: 6.77 இன்ச் AMOLED திரை
Processor: சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chipset)
Operating System: சமீபத்திய ஆண்ட்ராய்டு 15
Software Update: இரண்டு வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் உத்தரவாதம்
Rear Camera: 50MP முதன்மை கேமரா + 2MP இரண்டாம் நிலை கேமரா
Selfie Camera: 32MP செல்ஃபி கேமரா
Battery: 7,300mAh பற்றரி
Charging: 90W அதிவேக சார்ஜிங் ஆதரவு
Connectivity: 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி 2.0
RAM: 8ஜிபி / 12ஜிபி ரேம்
Storage: 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
Colors: இரண்டு விதமான கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது
Price: ஆரம்ப விலை ₹21,999
The Vivo T4 looks so GOOD!😍 Check out the full video to know in detail👇🏻#vivot4 #vivot4unboxing pic.twitter.com/q7dPNrVcZ7
— mysmartprice (@mysmartprice) April 22, 2025
விவோ டி4-ன் AI திறன்கள்
விவோ டி4 ஸ்மார்ட்போனில் உள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு அம்சங்கள்(AI Erase, AI Photo Enhance, Live Text, AI Note Assistant, Super Documents, Circle to Search ஆகியவை உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |