அசத்தும் 200MP கேமரா: இந்தியாவில் Vivo V60e ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
விவோ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வி60e என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vivo V60e ஸ்மார்ட்போன்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, இந்தியாவில் புதிதாக Vivo V60e என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவோவின் V series ஸ்மார்ட்போன்கள் இந்திய பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் Vivo V60e ஸ்மார்ட்போன் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது.
அத்துடன் Vivo V60e ஸ்மார்ட்போனில் இந்திய பயனர்களுக்கு என்று சிறப்பு AI அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.
Vivo V60e சிறப்பம்சங்கள்
Vivo V60e ஸ்மார்ட்போன் பிரம்மாண்டமான 6.77 இன்ச் AMOLED திரையை கொண்டுள்ளது.
மீடியாடெக் டிமான்சிட்டி 7360 டர்போ சிப்செட் உடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 6,500mAh பற்றரி திறனுடன் 90 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு வசதியையும் கொண்டுள்ளது.
இதனுடன் இதில் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்கள் Vivo V60e ஸ்மார்ட்போனை தனித்துவமாக்குகிறது, பின்புறத்தில் 200 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட இரண்டு கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளது.
அத்துடன் இதில் 50 மெகா பிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12 ஜிபி ரேம் அம்சத்துடன் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கிய இந்த Vivo V60e ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |