விவோ எக்ஸ்70 சீரிஸ் வெளியீட்டு விவரம்! என்னென்ன சிறப்பம்சம் உள்ளது தெரியுமா?
செப்டம்பர் 10 ஆம் திகதி விவோ எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
புதிய விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் ஒரிஜின் ஓ.எஸ். வழங்கப்படும் என விவோ தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கைனெடிக் வால்பேப்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் கேமரா மாட்யூல் படமும் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.