பட்ஜெட் விலையில் வெளியான Vivo Y28 5G ஸ்மார்ட்போன்.., விலை தொடர்பான விவரங்கள்
இந்தியாவில், விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் வெளியிட்ட vivo Y28 5G ஸ்மார்ட்போனை பற்றி தான் பார்க்க போகிறோம்.
vivo Y28 5G ஸ்மார்ட்போன்
vivo நிறுவனம் இந்தியாவில் Y28 5G எனும் தனது புதிய பட்ஜெட் பட்ஜெட் விலை 5G மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
4 GB RAM /128 GB, 6 GB RAM/ 128 GB, 8 GB RAM /128 GB என 3 ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், Crystal Purple, Glitter Aqua எனும் இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
இந்த மொபைல் Dimensity 6020 சிப்செட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 6.56 Inch size LCD screen display (90 Hz) உள்ளது. கேமராவை மற்றும் டிஸ்பிளே அம்சங்கள் பொறுத்தவரை சமீபத்தில் வெளியான மொபைல்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக தான் இருக்கிறது.
மேலும், 5,000 mAh பேட்டரி திறன், 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் அளிக்கப்பட்டுள்ளது. Android 13 -யை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட vivo Y28 5G ஸ்மார்ட்போன் Funtouch OS 13 இயங்குதளத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Vivo Y28 5G ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை பட்ஜெட் விலையில் தான் உள்ளது. 4 /128 GB வேரியண்ட் விலை ரூ.13,999க்கும் , 6 / 128 GB வேரியண்ட் விலை ரூ.15,499க்கும் மற்றும் 8 /128 GB வேரியண்ட் விலை ரூ.16,999க்கும் விற்பனையாகிறது. மேலும், SBI, DBS, மற்றும் IDFC வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |