பிரபல விஜே அஞ்சனாவுக்கு இளைஞர் அனுப்பிய மெசேஜால் கடுப்பான கணவர்! வெளியிட்ட எச்சரிக்கை பதிவு
பிரபல விஜே அஞ்சனாவுக்கு இளைஞர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை பதிவிட்டு, அவரது கணவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான அஞ்சனா. அதன் பின் பிரபலமான தொகுப்பாளராக மாறினார். இதன் காரணமாகவே இவருக்கென்று சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
விஜே அஞ்சனாவும் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு சமூகவலைத்தளங்களில் பதில் அளிப்பதையும் பார்க்க முடியும்.
இந்நிலையில், சமூகவலைத்தள பக்கத்தில், vishnuuu1123 என்ற இணையவாசி, அஞ்சனாவிடன், நீங்கள் நடிகையாக வரலாமே, உங்கள் கணவர் தான் திரைத்துறையில் பீல்ட் அவுட் ஆகி கிடக்குறாரே, நீங்க நடிகையானால் அவருக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு, அவருடைய கணவருக்கும் இதை டேக் செய்துள்ளார்.
இதையடுத்து, அஞ்சனாவின் கணவர் அதை ஸ்கீரின் ஷாட்டாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த நபர் சமூகவலைத்தளங்களில் பல பெயர்களை வைத்து, சில மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருவதாகவும், முகம் தெரியாத இந்த இடியட், உன்னை எச்சரிக்கிறேன் என்று சென்னை பொலிஸ்சமூகவலைத்தள பக்கத்தை டேக் செய்துள்ளார்.
அதன் பின் விஜே அஞ்சனா, உனக்கெல்லாம் வேல வேட்டி இருக்குல மூடிக்கிட்டு வேலைய பாரு, துஷப்பிரயோகம் செய்றது தான் உன் வேலையா என்று குறிப்பிட்டுள்ளார்.