டான்ஸ் ஆடிக் கொண்டிந்த போது தலையை பிடித்து கீழே மயங்கி விழுந்த அர்ச்சனா? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் வேதனை
விஜே அர்ச்சனா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பல முன்னனி தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றியவர் விஜே அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் உட்பட அனைவரது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அவரது உண்மையான முகம் மக்களுக்கு தெரியவந்ததால் இன்றுவரை பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றார்.
இவருக்கு சமீபத்தில் திடீரென்று மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதையடுத்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரிவித்தார்.
அப்போது ஒருவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எப்போ வருவீங்க என்ற கேள்வி கேட்டதற்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பல மணி நேரம் நிற்க வேண்டும். ஆனால் என்னால் நிற்கமுடியாது என்றும் நான் பழைய நிலைக்கு மாற ஒரு சில மாதம் எடுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ பயங்கர வைரலாகி வருகின்றது. அதில் அர்ச்சனா, அவரது மகள் மற்றும் தங்கை மூவரும் நடனம் ஆடி கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று அர்ச்சனா தலையை பிடித்து கொண்டு படுக்கையில் சுருண்டு வீழ்ந்துவிட்டார்.
இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறீர்கள், இது எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் பாசமுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.