பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிக்கும் அதிமுக பிரபலம்... பரபரப்பு தகவல்

Tamil Nadu Police V. J. Chitra
By Raju May 02, 2022 08:39 AM GMT
Report

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிடம் பொலிசார் விசாரிக்கவுள்ளனர்.

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் சித்ரா. இவர் 2020 டிசம்பர் 9ல் செம்பரம்பாக்கத்தில் நட்சத்திர ஹொட்டலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவை, அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தந்தை காமராஜ் கொடுத்த புகார்படி, நசரத்பேட்டை பொலிசார் வழக்கு பதிந்து, சித்ராவின் கணவரை கைது செய்தனர்.

கடந்த 2021 மார்ச் 3ல், ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிக்கும் அதிமுக பிரபலம்... பரபரப்பு தகவல் | Vj Chithu Case Again

ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அப்போதைய ஆளும் கட்சி முக்கிய பிரமுகர்கள் என்பதால், பொலிசார் நடவடிக்கை எடுக்காமல், வழக்கை கிடப்பில் போட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் புகார் மனு கொடுத்தார்.

அதில், 'என் மனைவியின் தற்கொலைக்கு பின்னணியில் பணம் மற்றும் அதிகார பலம் படைத்த அரசியல், 'மாபியா' கும்பல் உள்ளது. 'சென்னையைச் சேர்ந்த சிலர், அரசியல் பலம் படைத்த நபர்களிடம், பெரிய அளவில் பணம் வாங்க முயற்சி செய்கின்றனர். அதற்கு, என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். 'ஒத்துழைக்கவில்லை என்றால், உன்னையும் கொன்று விடுவோம்' என, மிரட்டுகின்றனர்' என, தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய பொலிசார் மீண்டும் திட்டமிட்டுள்ளனர்.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முன், பெரம்பலுாரில், 'கிப்ட் ஷாப்' திறப்பு விழாவில் பங்கேற்றார். அதன் பின், அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரின், தொடர் தொந்தரவே காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அதனால், அவரை பொலிஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து, தீவிரமாக விசாரிக்க உள்ளதாகவும், மேலிடத்தின் கிரின் சிக்னல்' கிடைத்ததும், இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்கும் என தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சிக்கும் அதிமுக பிரபலம்... பரபரப்பு தகவல் | Vj Chithu Case Again

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US