எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அப்பவே அவர் சாப்பிடாம ஆயிட்டாரு.., VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
சின்னத்திரை சித்ராவின் தந்தை இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் அவரது தாயார் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
சித்ராவின் தாயார் வேதனை
சின்னத்திரையில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடந்த பரப்பிடிப்பின் போது தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே, சித்ராவின் தந்தை காமராஜ் என்பவர், அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்போது, சென்னை திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று சித்ராவின் தந்தை காமராஜ் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சித்ராவின் தாயார் செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், "4 மணிக்கு கூட அவரை பார்த்தேன், பால் கொடுத்தேன். 6 மணிக்கு பார்த்தால் சித்ராவின் அறையிலேயே அப்படி செய்து விட்டார்.
நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். அனால், அந்த தீர்ப்பு எப்போது வந்ததோ அப்போது இருந்து சாப்பிடாமல் ஆயிட்டார்.
நானும் தைரியமாக இருங்கள் என்று அவரிடம் சொல்வேன். ஆனால், அவர் தைரியமாக இல்லை. நான் இப்போ அனாதையாக ஆகிவிட்டேன். தனியாக நிற்கிறேன்" என்று கண்ணீர் மல்க பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |