ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக கவர்ச்சியான இளம்பெண் ஒருவரை அழைத்துவந்த புடின்: வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்
ஜப்பானில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற புடின், ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக கவர்ச்சியான இளம்பெண் ஒருவரை அழைத்துவந்ததாக முன்னாள் வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெள்ளை மாளிகைச் செயலரான Stephanie Grisham என்பவர், தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த புத்தகத்தில், புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழிபெயர்ப்பாளராக அழைத்து வந்ததாக தெரிவித்துள்ள Stephanie, அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அப்படி செய்ததாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் Daria Boyarskaya (36) என தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த விடயத்தை புடினுடைய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov மறுத்துள்ளார்.
புடினுடைய மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுப்பது வெளியுறவு அமைச்சகம்தான். அதற்கும் புடினுக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் அதிலெல்லாம் தலையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.