பிரித்தானியா இருளில் மூழ்கும் அபாயம்... ரஷ்ய சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் அமைச்சர்
ரஷ்யாவின் சைபர் தாக்குதல் காரணமாக, பிரித்தானியாவில் பல மில்லியன் மக்கள் இருளில் தவிக்கும் ஒரு நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் அமைச்சர்
ரஷ்ய உக்ரைன் போரில், பிரித்தானிய ஏவுகணைகள் ரஷ்யாவுக்குள் பிரயோகிக்கப்பட்ட விடயம் புடினை கொந்தளிக்க வைத்துள்ளது.
உக்ரைனுக்கு உதவியதால் பிரித்தானியாவும் நேரடியாக ரஷ்யாவுடன் போரில் இறங்கியுள்ளதாகவே தாங்கள் கருதுவதாக பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
Image: AP
இந்நிலையில், மறைமுக போராக, சைபர் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்துவதாக பிரித்தானிய அமைச்சர்களில் ஒருவரான Pat McFadden தெரிவித்துள்ளார்.
அதன்படி, ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் பிரித்தானியா மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தலாம் என தான் கருதுவதாக Pat McFadden தெரிவித்துள்ளார்.
ஒரு சைபர் தாக்குதல் மூலமாக, ரஷ்யா பிரித்தானியாவில் பல மில்லியன் மக்களை இருளில் மூழ்கடித்துவிடமுடியும் என்கிறார் Pat McFadden.
Image: PA Wire
அதாவது, பிரித்தானியாவின் மின்சாரம் வழங்கும் அமைப்புகளை ரஷ்ய ஹேக்கர்கள் ஹேக் செய்து, மின்சாரத்தை துண்டித்துவிடமுடியும் என தான் கருதுவதாக Pat McFadden தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், பிரித்தானிய அரசு மருத்துவமனைகளை ரஷ்ய ஹேக்கர்கள் ஹேக் செய்ததால், லண்டன் மருத்துவமனைகள் முக்கிய அறுவை சிகிச்சைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் அப்பாயின்ட்மெண்ட்களை ரத்து செய்ய நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |