இந்தியாவில் ரூ.1.30 லட்சத்தில் அறிமுகமான புதிய VLF Mobster
VLF நிறுவனம் தனது முதல் ICE ஸ்கூட்டரான Mobster-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரூ.1.30 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியான இந்த ஸ்கூட்டர், Aprilla SR 175 மற்றும் TVS Ntorq 150 போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Mobster ஸ்கூட்டரின் வடிவமைப்பு இத்தாலிய டிசைனர் Alessandro Tartarini மூலம் உருவாக்கப்பட்டது.
இது streetfighter பைக் ஸ்டைலில் TwinLED ஹெட்லைட், DRL, உயரமான Flyscreen மற்றும் வெளிப்பட்ட ஹெண்டிலுடன் வருகிறது.
சிவப்பு மற்றும் கிரே என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் Mobster, 12-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 120mm முன்னும் 130mm பின் டயர்களுடன் வருகிறது.
இது 125cc Single Cylinder எஞ்சினால் இயக்கப்படுகிறது. 12 bhp சக்தி மற்றும் 11.7nm டார்க் வழங்குகிறது. Dual gas-charged Shock Observers மற்றும் Telescopic Forks ஆகியவை ride quality-ஐ மேம்படுத்துகின்றன.
VLF Mobster-ன் முக்கிய அம்சங்கள்
- 5-inch TFT display
- Bluetooth மற்றும் screen mirroring
- USB சார்ஜிங், keyless ignition
- Auto start/stop, dual-channel ABS
- Traction control மற்றும் live dashcam
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
VLF Mobster Scooter launch in India, VLF Mobster Scooter India