11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப்போகும் Vodafone நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவை வழங்கும் வோடபோன் நிறுவனம், 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வோடபோன் பணி நீக்கம்
இந்தியாவில் தொலை தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களில், முதல் மூன்று இடங்களில் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
@istock
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து, மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடபோன் விரைவான இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், நிறுவனத்தின் பங்கின் விலை குறைந்து வருவதால், 11000 ஊழியர்களை பணி நிக்கம் செய்யவுள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய தலைமை அதிகாரி
இது பற்றி வோடபோன் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி மார்குரைட் டெல்லா வாலே, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
@adda
அதில் ” வோடபோனில் சில புதிய விதிகளை மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறேன். ஏனென்றால் நிறுவனத்தின் செயல்திறன் போதுமானதாக இல்லை. இதனால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார். சில மாற்றங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வரப்பட இருக்கிறது” என கூறியுள்ளார்.
வோடபோன் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதால், செலவை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
@getty images
மேலும் வாடிக்கையாளர் வளர்ச்சி தற்போது மந்த நிலையில் இருப்பதால், இது போன்ற முடிவு எடுக்கப்பட்டதாக வோடபோனின் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.