சவுதி எண்ணெய் நிலையம் மீது சரமாரி தாக்குதல்! பற்றி எரிந்த டேங்கர்: கமெராவில் சிக்கிய காட்சி
சவுதி எண்ணெய் விநியோகம் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜசன் நகரில் உள்ள எண்ணெய் விநியோகம் நிலையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் எண்ணெய் நிலையத்தின் ஒரு டேங்கர் தீப்பிடித்ததாக குறிப்பிட்ட அமைச்சகம், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறிவித்தது.
முக்கிய நிறுவல்களுக்கு எதிரான இந்த கோழைத்தனமான தாக்குதலை சவுதி அரேபியா கடுமையாக கண்டிக்கிறது என்று எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.
இந்த தாக்குதல்கள் சவுதியை மட்டும் குறிவைக்கவில்லை, பெட்ரோலிய ஏற்றுமதியை, உலகத்திற்கான நிலையான எரிசக்தி விநியோகத்தை, உலக வர்த்தக சுதந்திரம், அத்துடன் உலகப் பொருளாதாரம் ஆகியவற்றை குறிவைக்கிறது.
இது கடல் போக்குவரத்தையும் பாதிக்கிறது மற்றும் கடற்கரைகள் மற்றும் பிராந்திய நீர்நிலைகளை கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளுக்கு உட்படுத்துகிறது என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
5 ثواني.. لمفعول المقذوف?
— المرتضى المتوكل (@almortadha_) March 25, 2021
على محطة توزيع المنتجات البترولية#السعودية #جازان_الان #جازان pic.twitter.com/IAbgWx8tVE
வியாழக்கிழமை இரவு சவுதியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்திகள் ஏவிய குறைந்தது எட்டு ட்ரோன்களை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியது என சவுதி தலைமையிலான கூட்டுப்படை அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
الله يكثر من المقذوفات ?#الرياض #جدة #جازان #خميس_مشيط https://t.co/Q7EAtQhcvP pic.twitter.com/VJId3FiSsp
— المرتضى المتوكل (@almortadha_) March 25, 2021