ரஷ்யாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! சாம்பலால் மறைந்த பகுதி!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை செவ்வாய்க்கிழமை இந்த எரிமலை வெடித்து, புகை மற்றும் சாம்பல் மேகத்தை வானத்தில் வெளியிட்டதாக அப்பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடித்து சாம்பலை பரப்பிய எரிமலை!
ரஷ்ய அறிவியல் அகாடமியின் புவி இயற்பியல் ஆய்வின் கம்சட்கா கிளையின்படி, ஷிவேலுச் எரிமலை நள்ளிரவுக்குப் பிறகு வெடித்து, ஆறு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு கிரெசென்டோவை அடைந்தது, 108,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சாம்பல் மேகத்தை வெளியேற்றியுள்ளது.
க்ளூச்சி கிராமத்தில் 8.5cm (3.3in) வரை உயர்ந்து - அருகிலுள்ள பகுதிகள் எரிமலை சாம்பலின் அடர்த்தியான அடுக்கில் மூழ்கி அப்பகுதியே சாம்பலால் நிறைந்துவிட்டது.. உயிரிழப்பு உடனடியாக ஏற்படவில்லை எனவும் அப்பகுதியிலிருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!
ஆகையால் அப்பகுதியிலுள்ள அதிகாரிகள் அது தொடர்பான தீவிரமான கண்காணிப்பிலிருந்து வருகின்றனர்.அத்தோடு அப்பிரதேசத்திலுள்ள மக்களை கவனமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் மற்றும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.
Russia village under 8.5cm ash after volcano erupts https://t.co/95GYzUfx3g
— BBC News (World) (@BBCWorld) April 11, 2023