1 லட்சம் வேலைகளை குறைக்க Volkswagen திட்டம்., ஜேர்மனியில் 4 தொழிற்சாலைகள் மூடப்படலாம்
ஜேர்மனியின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான வோல்க்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம், ஜூன் 26 அன்று, வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுவனம், Hanover, Zwickau, Emden மற்றும் Audi நிறுவனத்தின் Neckarsulm தொழிற்சாலைகளை மூடுவதற்கான திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
இதனால் 45,000-க்கும் மேற்பட்ட வேலைகள் நேரடியாக பாதிக்கப்படலாம். மேலும், மொத்தமாக 1 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இந்த முடிவு, சீன கார் நிறுவனங்களின் கடுமையான போட்டி, அமெரிக்காவில் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மற்றும் ஐரோப்பாவில் குறைந்த விற்பனை காரணமாக எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
வோல்க்ஸ்வேகன் பங்குகள் தற்போது 16 ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்கு சரிந்துள்ளன.
நிறுவனத்தின் CEO ஒலிவர் ப்லூம் (Oliver Blume), நிறுவனத்தை அடிப்படையாக மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாநிலம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. "இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதை தடுக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்" என IG Metall தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு, உலக கார் தொழில்துறையில் மிகப்பெரிய வேலை இழப்பு சம்பவமாக வரலாற்றில் பதிவு செய்யப்படலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |