பிரான்ஸ் காட்டுத்தீ... தீவைத்த தீயணைப்பு வீரர்: திடுக் தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடுக் தகவல்
இந்நிலையில், தீயை துவக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஒருவர் தான் பெட்ரோல் மூலம் தீயை துவக்கியதாகவும், மற்றொருவர் தற்செயலாக சிகரெட் துண்டை எறிந்ததன் மூலம் அறியாமல் தீயை துவக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
மற்றொருவர், கைகளில் கரியுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |