பேருந்து மற்றும் கப்பல்களில் செல்லும் போது மட்டும் வாந்தி வருவதற்கான காரணம் என்ன?
பொதுவாக நம்மில் பலருக்கு பேருந்து மற்றும் கப்பல்களில் செல்லும் போது மட்டும் வாந்தி ஏற்படுவது சகஜம். ஆனால் இது எதனால் ஏற்படுகின்றது? ஏன் ஏற்படுகின்றது என்பது பற்றி பலருக்கும் தெரியாது.
உண்மையில் இதற்கு அறிவியல் அடிப்படையில் ஒரு சில காரணங்கள் சொல்லப்படுகின்றது.
நமது காதுகளின் உள்புறம் இருக்கும் குருத்தெலும்புகள் முக்கிய காரணம்.அந்த அமைப்புக்கு வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ் என்று பெயர்.
நாம் புவியீர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதற்கும் ,நடந்து ,ஓடுவதற்கும் ,கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்கும் ஒரு சென்சார் போல இந்த எலும்புகள் வேலை செய்து மூளைக்கு தகவல் அனுப்பி ,மூளை கால்களுக்கும் ,நரம்புகளுக்கும் கட்டளைகள் அனுப்பி நமது உடம்பை சமநிலை செய்கின்றோம்.
இந்த சென்சார் எலும்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றாலும் ,அல்லது மூளையுடனான தகவல் பரிமாற்றம் சரிவர இல்லையென்றாலும் மூளை சற்று குழம்பி வாந்தி வந்துவிடுகின்றது
இதுவே இதற்கு காரணமாக கருதப்படுகின்றது.