அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு
அமெரிக்க மாகாணம் வாஷிங்டனில் வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீப்பிடித்த வாக்குப்பெட்டிகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு முன்கூட்டியே நடைபெற்று வருகிறது. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மக்களுடன் மக்களாக நின்று வாக்களித்தார்.
இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் மற்றும் ஓரிகான் மாகாணத்தின் போர்ட்லேண்ட் பகுதிகளில் வாக்குப்பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
மர்ம நபர்கள் சிலர் இந்த செயலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தேகத்திற்கிடமான கார்
அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று தீப்பிடிப்பதற்கு முன்பு அங்கு கடந்த சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் வாக்குச்சீட்டு நிலைகளை சரிபார்க்க வாக்காளர்களை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், தீவைப்பு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் "Free Gaza" என்ற வெளிப்பாட்டுடன் அடையாளங்களைக் கொண்டிருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் சரியான நேரத்தில் மாற்று வாக்குகளை வைத்திருப்பதை உறுதிசெய்ய, கிளார்க் கவுண்டி ஆடிட்டர் அலுவலகம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வாஷிங்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீவ் ஹோப்ஸ் கூறுகையில், "எங்கள் தேர்தல் ஊழியர்களின் பாதுகாப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். ஜனநாயக செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறைச் செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |