சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக ஒரு நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக...
சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், சுவிஸ் வாடகை வீடுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பு, பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.

அந்த பிரேரணை, வீட்டு வாடகைகளை கண்காணித்து, வாடகைகள் மிக அதிகமாக உயர்த்தப்படும் பட்சத்தில், வாடகையை தானாகவே குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது.
இப்போதிருக்கும் நடைமுறையின்படி, பாதிக்கப்பட்டவர்கள் தனியாக தங்கள் பிரச்சினைகளுக்காக போராடவேண்டியுள்ளது.
ஆனால், அப்படி வாடகை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால், தாங்கள் வசிக்கும் வீடுகளிலிருந்து காலி செய்யவைக்கப்படலாம் என்ற அச்சம் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு உள்ளது.
ஆகவே, அவர்களுக்கு ஆதரவாக, தானாகவே வீட்டு வாடகை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நடைமுறைகளை மாற்ற, இந்த பிரேரணை கோருகிறது.
பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட 100,000 கையெழுத்துக்கள் தேவைப்படும் நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பு, 140,000 கையெழுத்துக்களைப் பெற்றுவிட்டது.
ஆக, அந்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுவது தொடர்பில் நாடாளுமன்றமும், அரசும் முடிவு செய்ய உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |