பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க முடியாமல் போகலாம்: முடிவுக்கு வரும் இறுதி கெடு
பிரித்தானியாவில் தேர்தலில் வாக்களிப்பதற்கான இலவச வாக்காளர் அதிகாரச் சான்றிதழ் பெற 85,000 பேர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது
பிரித்தானியாவில் 2.1 மில்லியன் மக்கள் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க அடையாள அட்டை வைத்திருக்க வாய்ப்பில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சுமார் 85,288 பேர்கள் மட்டுமே இணையமூடாக விண்ணப்பித்துள்ளனர்.
@PA
மேலும், இலவசமாக அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்க, 26ம் திகதி 5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது. இதனால் மில்லியன் கணக்கிலான மக்கள் வாக்களிக்க முடியாமல் போகும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மே மாத உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இங்கிலாந்தில் உள்ள மக்கள் முதல் முறையாக புகைப்பட அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்பது புதிய விதியாகும்.
கடவுச்சீட்டு அல்லது சாரதிகளுக்கான உரிமம் உள்ளிட்ட சான்றுகளை காண்பித்து வாக்களிக்கலாம், ஆனால் குறைந்த வருவாய் கொண்ட அப்பாவி மக்களுக்கு அதுபோன்ற சான்றுகள் இருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்களால் வாதிடப்பட்டது.
2 மில்லியன் பேர்களுக்கு அட்டை இல்லை
தற்போது 100,000 மக்களுக்கும் குறைவானவர்களே இலவச அடையாள அட்டையை பெற விண்ணப்பித்துள்ளதால், மே 4ம் திகதி முன்னெடுக்கப்படும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் மக்களில் 2 மில்லியன் பேர்களுக்கு அடையாள அட்டை இல்லை என தெரிய வந்துள்ளது.
@getty
இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 4,467 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர். கட்டாயம் அடையாள அட்டை வேண்டும் என்ற விதி 2.1 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாகும் என்ற ஆதரவு குரலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.