கனடா பெடரல் தேர்தல்... முன்கூட்டியே வாக்களித்தவர்கள் எத்தனை மில்லியன்?
கனடாவில் பெடரல் தேர்தல் செப்டம்பர் 20ம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கும் நிலையில் மக்கள் முன்கூட்டியே வாக்களித்து வருகின்றனர்.
கனடாவில் பெடரல் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப முன்கூட்டியே வாக்களிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்ட இந்த சிறப்பு வசதியினூடாக முதல் நாளில் மொத்தம் 1.3 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியானது திங்கட்கிழமை இரவு 9 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே தெரிய வந்துள்ளது.
2019 பெடரல் தேர்தல் வாக்குப்பதிவை ஒப்பிடுகையில், இந்த முறை முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை முதல் நாளில் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
2019ல் முன்கூட்டியே வாக்களித்தவர்கள் மொத்தம் 4.7 மில்லியன். 2015ல் இந்த எண்ணிக்கை 3.65 மில்லியன் என பதிவாகியிருந்தது.
கனேடியர்கள் சிறப்பு அனுமதி பெற்று வார நாட்களிலும் வாக்களிக்கலாம். இந்த சிறப்பு வாக்களிப்புக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரையில் அனுமதி உண்டு.
மட்டுமின்றி அஞ்சல் மூலம் வாக்களிக்க பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் இதுவாகும்.
இதன் பின்னர், செப்டம்பர் 20ம் திகதி முன்னெடுக்கப்படும் வாக்குப்பதிவில் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.