இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) மாலை 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
அதன்படி, வாக்குப் பெட்டிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக 17,140,354 இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
1,765,351 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன் கொழும்பு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், குருநாகல் மாவட்டத்தில் 1,417,226 வாக்காளர்களும் உள்ளனர். வடக்கு மாகாணத்தில் மொத்தம் 899,268 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (21) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்றது.
இந்த ஆண்டு தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இது நாட்டின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆகும்.
இதேவேளை, இன்று பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 60 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |