சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டை: வாக்காளர்களின் ஆச்சரிய முடிவு
பிரித்தானியாவைப்போல சுவிட்சர்லாந்திலும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் எண்ணங்களை அறிவதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்காளர்களின் முடிவு
வாக்காளர்கள் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
ஆனால், வாக்களிப்பு வீதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆம், 50.4 சதவிகித வாக்காளர்கள் டிஜிட்டல் அடையாள அட்டைக்கு ஆதரவாகவும், 49.6 சதவிகிதம்பேர் எதிராகவும் வாக்களித்துள்ளார்கள்.
அதாவது, மிகச்சிறிய வித்தியாசத்திலேயே வாக்கெடுப்பு வெற்றிபெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டும் இதேபோல டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் எண்ணங்களை அறிவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த வாக்கெடுப்பில், தனியார் நிறுவனங்கள் இந்த விடயத்தில் தலையிடுவதற்கு எதிர்ப்பு உருவானதையடுத்து மக்கள் அதற்கு எதிராக வாக்களித்தார்கள்.
ஆகவே, இம்முறை, சுவிஸ் அரசே இம்முறை டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளதுடன், அவை கட்டாயம் அல்ல என்றும் இலவசம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |