ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கும் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு, மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இங்கு, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |