FIFA 2026: கால்பந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த 40 வயது வீரர்
ஃபிபா உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக 7 கோல் வாய்ப்புகளை தடுத்து, கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வோசின்ஹா
அட்லாண்டாவில் நடந்த FIFA 2026 போட்டியில் ஸ்பெயின், கேப் வெர்டே அணிகள் மோதின.
சாம்பியன் அணியான ஸ்பெயின் அணிக்கு குட்டி தீவு அணியான கேப் வெர்டே கடுமையான நெருக்கடி கொடுத்தது. குறிப்பாக, அந்த அணியின் வோசின்ஹா (Vozhinha) ஸ்பெயின் அணியின் கோல் வாய்ப்புகளை அபாரமாக செயல்பட்டு தடுத்தார்.
அவரது அபாரமான செயல்பாட்டினால் ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதனால் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.
சில மணிநேரங்களில் பிரபலம்
7 கோல் வாய்ப்புகளை தடுத்த 40 வயது கோல் கீப்பர் வோசின்ஹா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டி முடிவடைந்த சில மணிநேரங்களிலேயே, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு சுமார் 50,000யில் இருந்து, 5.2 மில்லியனைக் கடந்தது. இதன்மூலம் அவர் உலகம் முழுக்க பிரபலமான விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |