அரையிறுதிக்கு முன் ஐசியூ-வில் சிகிச்சை... ஆஸ்திரேலியாவை திணற வைத்த பாகிஸ்தான் வீரருக்கு தலைவணங்கிய விவிஎஸ் லக்ஷ்மண்
ஐசியூ-வில் சிகிச்சை பெற்ற நிலையில் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் களமறிங்கி ஆஸ்திரேலியாவை தனது பேட்டிங் திறமையால் திணறவிட்ட பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.
நேற்று துபாயில் நடந்த இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிப்பெற்றது.
எதிர்வரும் நவம்பர் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 67 ரன்களில் அவுட்டானார்.
தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி பயிற்சி ஊழியர்கள், அரையிறுதி போட்டிக்கு முன் முகமது ரிஸ்வான் 2 நாட்கள் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, இக்கட்டான நேரத்திலும் தன்னை பற்றி கவலைப்படாமல் நாட்டிற்காக களமிறங்கிய விளையாடிய முகமது ரிஸ்வானை பலர் பாராட்டினர்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணும் ரிஸ்வானை பாராட்டியுள்ளார்.
விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டரில் பதிவிட்டதாவது, தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அணி(பாகிஸ்தான்) வெற்றி பெறாமல் இருக்கலாம், ஆனால் இரண்டு நாட்கள் ஐசியுவில் இருந்த முகமது ரிஸ்வானின் மன உறுதியும் போராட்ட குணமும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.
A great example of courage, determination and resilience. Might not have ended up on the winning side, but Mohd. Rizwan’s grit and fight after being in ICU for two days, truly inspiring. Sport is a great teacher and there is so much to learn from everyone. pic.twitter.com/O2PatLEuWJ
— VVS Laxman (@VVSLaxman281) November 12, 2021
விளையாட்டு ஒரு சிறந்த ஆசிரியர், எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என தெரிவித்துள்ளார்.