Volkswagen Golf GTI இந்தியாவில் அறிமுகம்: Mini Cooper S, Mercedes AMG A45S-க்கு போட்டி
நீண்டகால காத்திருப்பிற்கு பின் Volkswagen Golf GTI இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Volkswagen Golf GTI ரூ.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.
முதன் தொகுதியாக 150 யூனிட் முன்பதிவு செய்து முழு விற்பனையாகி விட்டது.
இதையடுத்து, இரண்டாம் தொகுதியாக 100 யூனிட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த GTI-யில் 2.0-லீட்டர் டர்போ பெட்ரால் என்ஜின், 7-speed DCT automatic gearbox கொண்டுள்ளது. 260 bhp peak power மற்றும் 370 Nm of maximum torque இதில் கிடைக்கும்.
மணிக்கு 0–100 கி.மீ. வேகத்தை 5.8 செகண்டில் எட்டும், உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கி.மீ. பாயும் திறன் இதிலுள்ளது.
இந்த கோல்ஃப் GTI, வோல்க்ஸ்வேகனின் இரண்டாவது GTI மொடலாகும்; 2016-இல் வெளிவந்த Polo GTI-யைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய சந்தையில் இது 2-டோர் Mini Cooper S (ரூ.44.90–55.90 லட்சம்) மற்றும் Mercedes-AMG A 45 S (ரூ.94.80 லட்சம்) இடையே போட்டியிடும்.
Golf GTI-யின் விலை, சக்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இனி இந்திய ஹாட் ஹேச் பிரிவில் புதிய தரத்தை நிர்ணயிக்கத் தயாராகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |