பல மில்லியன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: மன்னருடைய நாடாளுமன்ற உரையில் மகிழவைக்கும் செய்தி
பிரித்தானியாவின் புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், லேபர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
பணியாளர் உரிமைகள் தொடர்பில் அவர் அறிவித்த நலத்திட்டங்களில் ஒன்று, பல மில்லியன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதாகும்.
பல மில்லியன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
பிரித்தானியாவில் பதவியேற்றுள்ள புதிய அரசு, பணி உரிமைகள் மசோதா ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த மசோதா 100 நட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் வகையில், பல மில்லியன் பணியாளர்களுக்கு, நியாயமான வகையில் குடும்பம் நடத்துவதற்கு போதுமான அளவில், ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.
அனைவருக்கும் சமமான அடிப்படை ஊதியம்
லேபர் கட்சி, நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் பொருள் என்னவென்றால், வயது வந்த அனைத்து பணியாளர்களுக்கும் பாரபட்சமின்றி ஒரேவிதமான அடிப்படை ஊதியம் கிடைக்கும் என்பதாகும்.
சில நிறுவனங்களில், குறைந்தபட்சம் எத்தனை மணி நேர வேலை இருக்கும் என்பதைக் குறிப்பிடாமலே பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படும் நிலை காணப்படுகிறது. அதை புதிய அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது.
சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு திரும்ப வேலைக்கு எடுக்கின்றன. இரண்டாவது அவர்களை பணிக்கு எடுக்கும்போது, முன்பு வழங்கியதைவிட குறைவான ஊதியமே வழங்கும் ஒரு மோசமான நிலை காணப்படுகிறது. அது தொடர்பான சட்டத்திலும் புதிய அரசு மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், பணியாளர்களுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு, ஊதியம் முதலான விடயங்களிலும் நல்ல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |