வயதான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சுவிட்சர்லாந்து அரசு திட்டம்
சுவிஸ் அரசு, வயதான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் அளிப்பது தொடர்பாக திட்டமிட்டுவருகிறது.
பின்னணி
சுவிட்சர்லாந்தில், வயதான ஊழியர்கள் வேலையில் நீடிப்பதை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு ஊதிய உயர்வு முதலான சில சலுகைகளை அளிக்கத் திட்டமிடப்பட்டுவருகிறது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாகவும், ஓய்வூதியம் வழங்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவும், வயதானவர்களை பணியில் நீட்டிக்க செய்ய சுவிஸ் அரசு விரும்புகிறது.
திட்டமும் எதிர்ப்பும்
ஆக, வயதானவர்களை பணியில் நீட்டிக்க செய்வதற்காக, அவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்க வேண்டும், அதாவது, வயதானவர்களுக்கு குறைவான வரி விதித்தால் போதும் என ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டப்படி எல்லா ஊதியங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்கப்படவேண்டும் என்று கூறி இந்த ஆலோசனையை அரசு எதிர்க்கிறது.
அதேபோல, அதிக ஊதியம் வாங்குபவர்களுக்கு இந்த சலுகையால் அதிக பயன் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள்.
ஆகவே, நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அதிக ஓய்வூதியம் என்னும் சலுகையை அறிவிக்கலாம் என அரசு கூறுகிறது.
இந்த விடயம், நாளை, சுவிஸ் நாடாளுமன்ற மேலவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.