ஜேர்மனியின் கிங் மேக்கர் கட்சியின் தலைவர் பதவி விலகல்
கடந்த ஆண்டில் மக்கள் ஆதரவையும் பெற்று, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையிலும் இருந்ததால் கிங் மேக்கர் கட்சி என அழைக்கப்பட்ட கட்சியின் தலைவர் பதவி விலகியுள்ளார்.
கிங் மேக்கர் கட்சியின் தலைவர் பதவி விலகல்
Sahra Wagenknecht Alliance (BSW) என்னும் ஜேர்மன் கட்சியின் தலைவர்களில் ஒருவர் சாரா (Sahra Wagenknecht).

கடந்த ஆண்டில், கிழக்கு ஜேர்மனியின் Saxony மற்றும் Thuringia மாகாணங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில், புதிதாக துவங்கப்பட்ட BSW கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்ததால் கவனம் ஈர்த்தது.
அத்துடன், ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையிலும் இருந்ததால் BSW கட்சி கிங் மேக்கர் கட்சி என அழைக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் BSW கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆகவே, தோல்விக்கு பொறுப்பேற்று BSW கட்சியின் தலைவரான சாரா தனது கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்திலும் தான் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் சாரா.
சாராவுக்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினரான Fabio de Masi என்பவர் BSW கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க உள்ளார்.
சாரா, BSW கட்சியை நிறுவியவர்களிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |