வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை செய்தது பிரித்தானியா
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக குறிப்பிட்டு, பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம்
செப்டம்பர் 6ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் துரிதமாக முடிவெடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
@reuters
ஆகஸ்ட் மாதம் மேற்கு ரஷ்யாவில் விமான விபத்தில் அதன் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த பிறகு, வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே கருதப்பட்டது.
2014ல் வாக்னர் கூலிப்படையை யெவ்ஜெனி பிரிகோஜின் துவங்கினார். சட்ட ரீதியாக ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாக இருந்தாலும் 2022ல் தனியார் ராணுவப் படை என வாக்னர் கூலிப்படை பதிவு செய்துள்ளது.
நாடுகடந்த குற்றவியல் அமைப்பு
பிரிகோஜின் ரஷ்யாவில் தொழிலதிபர் மட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர். வாக்னர் கூலிப்படை துவங்கப்பட்ட நாட்களில், சுமார் 5,000 பேர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
@bbc
ஆனால் 2022ல் ரஷ்ய சிறைக் கைதிகளை தமது குழுவில் இணைத்துக்கொண்டார் பிரிகோஜின், இதனால் 25,000 பேர்கள் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.
வாக்னர் கூலிப்படையானது சிரியா, மாலி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
2023 ஜனவரில் வாக்னர் கூலிப்படையை நாடுகடந்த குற்றவியல் அமைப்பு என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் பல வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |