பாகிஸ்தானின் தேர்வுக்குழுவின் தலைமை தேர்வாளராக வேகப்பந்து வீச்சாளர் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ், தேசிய ஆடவர் தேர்வுக்குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அதேபோல் அணியின் பயிற்சியாளர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் தேசிய தேசிய ஆடவர் தேர்வுக்குழுவின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வாரியம் அறிவித்துள்ளது.
AFP/File
அவுஸ்திரேலியாவில் டிசம்பர் 14 முதல் சனவரி 7ஆம் திகதி வரை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு, தேசிய அணியை தெரிவு செய்வது வாஹப்பின் முதல் பணியாகும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தேசிய ஆடவர் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைகிறேன், இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பிசிபி நிர்வாகக் குழுவின் தலைவர் திரு. ஜகா அஷ்ரஃப் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் விடயங்களில் முன்னாள் வீரர்களை ஈடுபடுத்தும் முடிவு பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க தயாராக இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |