நான் பந்து வீச பயந்த வீரர் இவர் தான்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாஹாப் ரியாஷ் சொன்ன காரணம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாஹாப் ரியாஷ் தான் பந்து வீச பயந்த பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் Jaffna Kings அணிக்காக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாஹாப் ரியாஸ் ஆடி வருகிறார்.
இந்த தொடரின் இடையே அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், தன்னைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, பாபர் அசாம் ஆகியோர் சிறந்த வீரர்கள், தான் இவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.
இருப்பினும் தான் பந்து வீசிய காலத்தில், நான் பந்து வீச பயந்த வீரர் என்றால் அது தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தான், அவர் தான் பந்து வீச வரும் போதே நான் எப்படி பந்து வீசப் போகிறேன் என்பதை அறியும் திறன் அவரிடம் இருந்தது.
இதன் காரணமாக நான் எப்போதெல்லாம் அவருக்கு எதிராக பந்துவீசி வருகிறேனோ அப்போதெல்லாம் என்னை எதிர்த்து அவர் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளதாக கூறினார்.