மனைவி கேட்டை மருத்துவமனையில் பார்த்த இளவரசர் வில்லியம்: மன்னர் உடல் நிலை குறித்து கமீலா விளக்கம்
வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம் இன்று மருத்துவமனையில் சந்தித்தார்.
இளவரசி கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை
பிரித்தானியாவின் 42 வயதான வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) செவ்வாய் கிழமை மத்திய லண்டனில் உள்ள “தி லண்டன் கிளினிக்”(The London Clinic) என்ற தனியார் மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடந்து முடிந்து இருப்பதாகவும், 10 முதல் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுத்த பின்னர் விண்டர் கோட்டையில் ஓய்வு எடுப்பார் எனவும் கென்சிங்டன் அரண்மனை(Kensington Palace) தெரிவித்துள்ளது. மருத்துவ ஆலோசனையின் படி, கேட் மிடில்டன் ஈஸ்டர் பிறகு ராஜாங்க வேலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தி லண்டன் கிளினிக் மருத்துவமனைக்கு மதியம் 12.35 மணிக்கு வேல்ஸ் இளவரசர் வில்லியம் Land Rover Discovery கார்கள் பின் தொடர தன்னுடைய Audi e-Tron GT Carbon Vorsprung காரில் வந்தார்.
மனைவி கேட்டை சந்தித்த பிறகு மருத்துவமனையின் பின்பக்க நுழைவு வாயில் வழியாக வெளியேறி சென்றார்.
மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக இளவரசர் வில்லியமும் தன்னுடைய அனைத்து பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.
புரோஸ்டேட் சிகிச்சை
இதற்கிடையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புரோஸ்டேட் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக நேற்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்து இருந்தது.
மன்னர் உடல்நிலை குறித்து பிரித்தானிய ராணி கமீலா இன்று மதியம் செய்தியாளர்கள் வழங்கிய தகவலில், அரசர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவாக ராஜாங்க பணிக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton