புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு இறுதிக்குள் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் தனது குழந்தைகளுடன் புதிய வீட்டிற்கு செல்ல இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் குடும்பம்
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் தனது குழந்தைகளுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் கிரேட் பார்க்(Great Park) பகுதியில் உள்ள பாரஸ்ட் லாட்ஜ்(Forest Lodge) என்ற தங்களது புதிய வீட்டிற்கு குடியேற உள்ளனர்.
இந்த செய்தியை கென்சிங்டன் அரண்மனை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
The Sun செய்தி நிறுவனத்தின் தகவல் படி, 8 விசாலமான படுக்கையறைகள் கொண்ட இந்த புது வீட்டின் மதிப்பு சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சொத்து மற்றும் அதற்கு தேவையான சிறிய மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றிற்கான முழு செலவையும் ராஜ குடும்ப தம்பதி தங்களுடைய சொந்த பணத்தில் இருந்து செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்ட அரச சொத்து
இந்த புதிய சொத்து தொடர்பாக தி சண்டே டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் நடத்திய விசாரணையில், இளவரசர் வில்லியம் அவருக்கு சொந்தமான டச்சி ஆஃப் கார்ன்வால் சொத்தை அரசு அமைப்புகளுக்கு வாடகைக்கு விட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வேல்ஸ் அரச குடும்பத்தின் இந்த புதிய சொத்து அவர்களின் தற்போதைய வீட்டின் அருகிலேயே இருப்பதால் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோர் தற்போது படிக்கும் பள்ளியிலேயே அவர்களால் தொடர முடியும்.
மேலும் வேல்ஸ் அரச குடும்பத்தின் முக்கிய வசிப்பிடமாக வின்ட்சர் இருந்தாலும், நார்ஃபோக்கில் உள்ள அன்மர் ஹால் மற்றும் கென்சிங்டனில் உள்ள அபார்ட்மெண்ட் 1A ஆகியவையும் அவர்களின் இருப்பிடமாக உள்ளது.
வேல்ஸ் அரச குடும்பம் தற்போது வின்ட்சரில் உள்ள அடிலெய்டு காட்டேஜ் இல்லத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |