பிரித்தானியாவின் வேல்ஸ் 64 ஆண்டுகளுக்கு பின்.. உக்ரைனை வீழ்த்தி உலககோப்பைக்கு தகுதி!
உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 64 ஆண்களுக்கு பிறகு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை கத்தாரில் நடக்க உள்ளது.
இதில் 32 நாடுகள் பங்கேற்க உள்ளன. போட்டியில் பங்குபெற தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் வேல்ஸ் அணி உக்ரைன் அணியுடன் மோதியது.
கார்டிப் நகரில் நடந்த இந்த ஆட்டத்தின் 34வது நிமிடத்தில், உக்ரைன் வீரர் Andriy Yarmolenko, தமது அணியின் வலைக்குள் பந்தை தள்ளியதால் சுயகோலாக மாறியது.
Photo Credit: Paul ELLIS / AFP
அதன் பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இதன்மூலம், 64 ஆண்களுக்கு பிறகு உலகக்கோப்பையில் விளையாட வேல்ஸ் தகுதிபெற்றுள்ளது.
Photo Credit: Getty Images
Photo Credit: REUTERS