பதவியேற்றதன் பின்னர் சட்டவிரோதமாகவே செயல்படுகிறார்... ட்ரம்புக்கு எதிராக பிரதான நாளேடு கடும் தாக்கு
அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் ஜனாதிபதி ட்ரம்ப் மீது கடுமையான தாக்குதலை வெளியிட்டுள்ளதுடன், எவரேனும் அவர் மீது வழக்குத் தொடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.
வழக்குத் தொடர வேண்டும்
கனடா, மெக்சிகோ மீது வரி விதிக்க ஒரு ஜனாதிபதியாக ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்ற அவையின் ஒப்புதல் தேவை என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.
இதனால் கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதைத் தடுக்க டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
வட அமெரிக்க பொருளாதாரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு தனிப்பட்ட விளையாட்டுப் பொருளாகக் கருதுகிறார் என விமர்சித்துள்ள வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், இந்த வரிகளை விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் இருக்கிறதா என்பது சந்தேகமே, அவரது வரிவிதிப்பு சட்டப்பூர்வ சவாலுக்கு உள்ளாக வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் பொதுவாக குடியரசுக் கட்சியினரிடம் அனுதாபம் கொண்ட நாளேடு என்றாலும் ட்ரம்பின் வரிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. மட்டுமின்றி, நாட்டின் இரண்டு அண்டை நாடுகள் மீது 25 சதவீத வரிகளை விதிப்பதன் விளைவாக அமெரிக்காவில் நுகர்வோர் விலைகள் உயரும் என்று எச்சரித்துள்ளது.
காங்கிரஸின் ஒப்புதல் தேவை
அவசரகால விதியை உள்ளடக்கிய 48 ஆண்டு பழமையான சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்துவது நியாயப்படுத்தப்படவில்லை, மேலும் அவருக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவை என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் வாதிட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, அதற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக பைடன் நிர்வாகம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய எரிசக்தி, கடல் உணவு மற்றும் மதுபான இறக்குமதியைத் தடை செய்துள்ளது.
ஆனால் ஜோ பைடன் ரஷ்யா மீது வரி விதிக்க மறுத்ததுடன், அடுத்த மாதம் அதற்கான அதிகாரத்தை காங்கிரஸிடம் கேட்டார், அது அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அதைப் பின்பற்றினார் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |