வயதான தோற்றத்தை குறைக்கும் வால்நட் எண்ணெய்; எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை மெருகூட்டி அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அந்தவகையில் வால்நட் எண்ணெய் ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கான வழியை தருகிறது. அதை வைத்து சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.
மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி - அங்கு இருக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா?
வால்நட் எண்ணெயின் நன்மைகள்
வால்நட் எண்ணெயானது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் நம்பமுடியாத நிறைய நன்மைகள் காணப்படுகிறது.
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
புற்றுநோய் பாதிப்பு, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், கண்ணின் கீழ் வரும் வருவளையத்தை தடுக்கும்.. இவ்வாறு பல நன்மைகளை அள்ளி தருகிறது.
சருமத்திற்கு வழங்கும் நன்மைகள்
இந்த எண்ணெய்யை சருமத்திற்கு பூசுவதன் மூலம் உங்களுடைய சருமமானது இளமைத் தோற்றத்துடன் எப்போதும் காணப்படும்.
வால்நட் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளால் முகப்பரு ஏற்படுவது தடுக்கப்படும்.
இந்த எண்ணெய் வைத்து சருமத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள பூஞ்சை தொற்று நீங்கும்.
சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும தொற்றில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு தீரும்.
தலையில் தடவி வருவதன் மூலம் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |