10 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள்! அவுஸ்திரேலியாவை சம்பவம் செய்த வீரர்
West indies champions into the final of legends champions: அவுஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் 2வது அரையிறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்
ஷார்ஜாவில் நடந்த லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் 2வது அரையிறுதியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், டி ஆர்க்கி ஷார்ட் இருவரும் டக்அவுட் ஆகினார். பின்னர் ஜோ பர்ன்ஸ் (Joe Burns) 52 பந்துகளில் 86 ஓட்டங்களும், ஜோனதன் வேல்ஸ் 33 பந்துகளில் 49 ஓட்டங்களும் விளாச, அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களும் எடுத்தது.
ஷெல்டன் காட்ரெல் 4 விக்கெட்டுகளும், கார்லோஸ் பிராத்வெயிட் 2 விக்கெட்டுகளும், பென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வால்டன் ருத்ரதாண்டவம்
சாத்விக் வால்டன் (Chadwick Walton) 42 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களும், சந்தர்பால் 27 பந்துகளில் 41 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினர்.
கேன் ரிச்சர்ட்சன், நேதன் கால்டர்-நைல் தலா 2 விக்கெட்டுகளும், ஃபாவத் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மேற்கிந்திய தீவுகள் அணி, நாளை இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
