14 பில்லியன் டொலர் ஒப்பந்தம்... மெட்டாவில் வேலை: யாரிந்த அலெக்ஸாண்டர் வாங்
AI தொழில்நுட்ப நிறுவனத்தால் கோடீஸ்வரரான அலெக்சாண்டர் வாங் என்பவர் மெட்டா நிறுவனத்தின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகங்களின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Scale AI நிறுவனம்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் அலெக்சாண்டர் வாங் உடன் முன்னெடுத்த 14.3 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக வாங் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார்.

கடந்த 2016ல் Scale AI என்ற நிறுவனத்தை தமது நண்பருடன் இணைந்து அலெக்சாண்டர் வாங் நிறுவினார். நிறுவனங்கள் தங்களின் தரவுகளை AI மற்றும் இயந்திர கற்றலுக்காக வேலை செய்ய வைக்க உதவும் பணிகளை Scale AI நிறுவனம் முன்னெடுக்கிறது.
மெட்டா நிறுவனம் ஸ்கேல் AI இன் 49 சதவீத பங்குகளை வாங்கும் வரையில், ஜூன் 2025 வரை வாங் தமது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.

சீன வம்சாவளி
லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் இயற்பியலாளர்களாக பணியாற்றிய சீன வம்சாவளி பெற்றோருக்கு நியூ மெக்சிகோவில் பிறந்தவர் வாங்.
தற்போது 28 வயதாகும் வாங் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சேர்ந்தார், ஆனால் 2016 இல் ஸ்கேல் AI நிறுவனத்திற்காக அங்கிருந்து வெளியேறினார்.

2024 ஆம் ஆண்டு வாக்கில், ஸ்கேல் AI நிறுவனம் கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பை எட்டியது, இது AI துறையில் இளம் பில்லியனர்களில் ஒருவராக வாங்கை நிலைநிறுத்தியது.
வாங்கின் தற்போதைய சொத்து மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே ஃபோர்ப்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |