டி20 தரவரிசை! நம்பர் 1 பவுலரான இலங்கை வீரர் ஹசரங்கா ஆல்ரவுண்டர் பட்டியலிலும் மளமளவென முன்னேற்றம்
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை இளம்புயல் வனிந்து ஹசரங்கா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் வனிந்து டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆல்ரவுண்டர் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மற்ற டி20 பட்டியலை பொருத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
அதே போல ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.