வனிந்து ஹசரங்க விலகல்! அவுஸ்திரேலியாவுன் மோதும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு பெரிய இழப்பு
இலங்கை நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலுமே அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்று 2-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி கான்பெரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது, அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
3வது டி20 போட்டியிலும் வெற்றிப்பெற்றால் அவுஸ்திரேலிய அணி டி20 தொடரை கைப்பற்றிவிடும் என்பதால், இன்றைய போட்டியில் வெற்றிப்பெற இலங்கை அணி தீவிரமாக போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஆனால், இலங்கை நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க கொரோனா தொற்று பாதிப்பால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளது, இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல பிப்ரவரி 15ம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen கொரோனா பரிசோதனையில், வனிந்து ஹசரங்காவுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே, 3வது டி20 போட்டிக்கான இலங்கை பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டள்ளது.
வனிந்து ஹசரங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோவுக்கு பதிலாக குசால் மெண்டிஸ், Vandersay இலங்கை பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Vandersay and Kusal Mendis IN for Wanindu and Avishka Fernando ?#AUSvSL pic.twitter.com/VtZe8XKSk7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 15, 2022
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் 3வது வீரர் ஹசரங்க என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, குசால் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். குசால் மெண்டிஸ் தனிமைப்படுத்தல் முடிந்து அணிக்கு திரும்பியுள்ளார், பினுர தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் தற்போது அமுலில் இருக்கும் நடைமுறைப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Player Update #AUSvSL?:
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 15, 2022
Wanindu Hasaranga has tested positive for Covid-19.
The player was found to be positive during a routine Rapid Antigen Test (RAT) conducted this morning (15th February).
Hasaranga is currently undergoing Covid-19 protocols and is placed in isolation.