கோஹ்லி அணிக்கு விளையாடப் போவது எப்படி இருக்கு தெரியுமா? ஐபிஎல்லில் புதிதாக சேர்ந்துள்ள இலங்கை வீரர் நெகிழ்ச்சி
இலங்கை அணி வீரரான வஹிந்து ஹசரங்கா, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி எடுக்கப்பட்டது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பாதியோடு ஒத்தி வைக்கப்பட்டது.
ஒத்தி வைக்கப்பட்ட இந்த தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு அணி நேற்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிந்து ஹசரங்கா, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா மற்றும் சிங்கப்பூர் அதிரடி மன்னன் டிம் டேவிட் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக ஹசரங்காவும், டேனியல் சாம்ஸ்-க்கு பதிலாக சமீராவும், Finn Allen-க்கு பதிலாக டிம் டேவிட்-ம் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது,
இது குறித்து வஹிந்து ஹசரங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெங்களூர் அணிக்கு ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பெங்களூரு அணியின் முகாமில் சேர்வது தனக்கு கவுரவத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை வீட்டில் அவர்களை உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன், இப்போது அந்த அணியுடன் ஒரே நேரத்தில் இருப்பதை நினைக்கும் போது, உற்சாகமாகவும், பரவசமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.