அடுத்தடுத்து வெளியேறும் இலங்கை வீரர்கள்! முக்கிய ஆல்ரவுண்டர் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா, ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனிந்து ஹசரங்கா
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கை விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டி டை ஆன நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. முதல் போட்டியில் 24 ஓட்டங்கள் எடுத்த ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி, அணியில் தோல்வியில் இருந்து காப்பாற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.
ஜெஃப்ரி வாண்டர்சே
எஞ்சிய போட்டிகளில் அவர் வெளியேறவுள்ளமை தொடர்பில் இலங்கை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே (Jeffrey Vandersay) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
34 வயதாகும் வாண்டர்சே, 21 ஒருநாள் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |