அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நட்சத்திர வீரர்கள் விலகல்! இலங்கைக்கு பெரிய இழப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 2 இலங்கை நட்சத்திர வீரர்கள் விலகியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி, அவுஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்தது.
எனினும், மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் ஒயிட் வாஷை தவிர்க்க இலங்கை போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் நுவன் துஷாரா விலகியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஹசரங்க விலகியுள்ளார்.
3வது டி20 போட்டியில் பந்து வீசும் போது காயமடைந்த காரணத்தினால் நுவன் துஷாரா விலகியுள்ளார்.
இரண்டு வீரர்கள் விலகியுள்ளது மீதமுள்ள போட்டிகளில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இலங்கை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.